Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 08 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் முசலி பிரதேசத்தில் இவ்வருடம் மீளெழுச்சி திட்டத்தின் கீழ் பல் வேறு அபிவிருத்தி பணிகளுக்கென 147 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார். நேற்று மாலை முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மீள்குடியேற்ற கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடுகளுக்காகவே இந் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கரடிக்குளி பிரதேசத்தில் 2.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மீனவ இறங்குதுறையின் பணிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 60 பேருக்கு சுயதொழில் உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago