2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கட்டிட பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

விசுவமடு மேற்கு பகுதியில் பொது மக்களுடைய கட்டிடப் பொருள்களை களவாடி 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விசுவமடு மேற்கு பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீளக்குடியேற சென்றவர்கள் தங்களுடைய வீட்டு கதவு யன்னல், கூரைத் தகடுகள் கழற்றப்பட்டுள்ளதினை அவதானித்து பொலிஸாரிடம் புகார் செய்திருந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது அயல் கிராமத்தைச் சேர்ந்த 19 பேரை கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்செய்தனர்.  இவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--