2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மன்னார் பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் அரச பஸ் நிலையத்தினுள் தனியார் வாகனங்கள் நுழைவதற்கு நேற்று முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பேருந்து சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் மேற்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் தனியார் வாகனங்கள் காலை 9 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையுல் அரச பஸ் நிலையத்தினுள் உள்ள வர்த்தக நிலையங்களின் பொருட்களை ஏற்றி இறக்க முடியும்.

இதனைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தினுள் உள் நுழையத் தடை செய்யப்பட்டிருப்பதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--