Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
கிளிநொச்சி முக்கொம்பன் சின்ன பல்லவராயன் கட்டு நெல் அறுவடை விழா நேற்று பல்லவராயன்கட்டு கமக்காரர் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், "கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் அறுவடை விழாவில் கலந்து கொள்வது மிகவும் சந்தோசமான விடயமாகும்.
இந்நிலையில், விவசாயிகள் தங்களது பயிர்ச் செய்கையை சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவையான விதை நெல், உழவு இயந்திரம், பசளை, கிருமிநாசினி போன்றவற்றை நிவாரண முறையில் பெறுவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, இந்த கிராமங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் அரிசி ஆலைகளை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
விவசாயிகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்ட சந்திரகுமார், சின்ன பல்லவராயன்கட்டு முன்பள்ளிக்கும், தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை இந்த வருட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட கமக்கார உதவி ஆணையாளர், பூநகரி திட்டமிடல் பணிப்பாளர், கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago