Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
செட்டிகுளம் மன்னார் வீதியிலுள்ள முகத்தான்குளம் எனும் இடத்தில் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வானுடன் குறித்த மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதாக விசாரணையின்போது தெரியவருகின்றது.
இறந்தவர்களில் ஒருவர் மெனிக்பாமைச் சேர்ந்தவர் என்பதுடன், மற்றையவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
14 minute ago
23 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
30 minute ago
1 hours ago