Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
நிதி அமைச்சின் சுனாமி மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் வற்றாபளை மகாவித்தியாலயத்திலும், ஒட்டிசுட்டான், கற்சிலைமடுவிலும் நடைபெற்ற பதிவாளர் நாயகத்தின் நடமாடும் சேவைகள் வெற்றிகரமானதாக இடம்பெற்றது.
6800 விண்ணப்பங்கள் பெறப்பட்டது அதில் 530 பிறப்பு இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டது என பிரதிப் பதிவாளர் நாயகம் ந.சதாசிவ ஐயர் தெரிவித்தார். பதிவாளர் நாயகம் எம்.குணசேகர இரு நாள்களும் இங்கு சமூகமளித்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினார்.
வலயங்களுக்கு பொறுப்பான உதவிப் பதிவாளர் நாயகங்களும் பிரசன்னமாகி இருந்தனர். யுத்த சூழல் காரணமாக பதிவு செய்யப்படாத பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுகளும் இதன்போது நடைபெற்றன. விண்ணப்பித்த சகலருக்கும் இரு வாரங்களுக்குள் ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் பொலிஸார் பதிவுகளை மேற்கொண்டு பிரதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025