2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வவுனியாவிலுள்ள அரச காணிகளில் அத்துமீறி குடியிருப்பவர்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஆர்.சுகந்தினி)

வவுனியாவிலுள்ள அரசாங்க காணிகளிலும் அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகளிலும் அத்துமீறி குடியிருப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு  வவுனியாவில் இன்று நடைபெற்ற வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி கூறியதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.


அத்துடன், ஏ -  9  வீதியின் திருத்த அபிவிருத்தி வேலைகளை விரைவில் முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகவும் தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு இன்று அவர் கூறினார்.

இதுவரையில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் குறைநிறைகளையும் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இரண்டு மணித்தியாலமாக நடைபெற்ற வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டனர்.  

இதேவேளை, ஓமந்தை புகையிரத நிலையத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்று பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--