Super User / 2010 நவம்பர் 03 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(ஹேமந்த்)
	
	கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி - பளை பிரதேச செயலர் பிரிவில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பளைப் பிரதேச செயலர் முகுந்தன் தெரிவித்தார்.
	
	இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
	
	போரினால் அழிவடைந்த பகுதிகளில் பளை பிரதேசம் முக்கியமானது. சேதமடைந்தவற்றை மீளமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இந்தப் பணிகள் துரிதமாக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. 
	
	பளையில் ஒரோயொரு தொண்டர் அமைப்பே பணியில் ஈடுபடுகின்றது. பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் மீள் கட்டுமானப் பணிகளுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை முடிந்த வரையில் விரைவுபடுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
	
	பருவமழைக்கு முன்னர் தற்காலிக வீடுகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தாம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
48 minute ago
1 hours ago
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago
8 hours ago