2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனையின் தீங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை: வவுனியா அரச அதிபர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் தீங்கு குறித்து வவுனியா மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. நகரில் பல இலட்சம் பொலித்தீன்கள் தினமும்  பாவனையில் விடப்படுகின்றது என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

மனிதனுடைய சுற்றாடலுக்கும் சூழலுக்கும்  ஆபத்தினை விளைவிக்கும் பிளாஸ்ரிக் வகைகளை அகற்றுவோம் சூழலை பாதுகாப்போம் என்னும் தலைப்பிலான கருத்தரங்கை வவுனியா செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மூன்று இலட்சம் மக்கள் வசித்து வந்த மெனிக்பாம்  நலன்புரி நிலையங்களில் தொற்றுநோய் ஏற்படவில்லை. டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகவில்லை. ஏனெனில,; அந்த மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சுத்தமும் சுகாதாரமும் பேணப்பட்டது இதனால் மெனிக்பாம்  நலன்புரி நிலையங்களில் தொற்றுநோய்களோ, டெங்கு நுளம்புகளோ உற்பத்தியாகவில்லை என வவுனியா அரச அதிபர்  குறிப்பிட்டார்.

பிளாஸ்ரிக் பொருட்கள், பொலித்தீன் பைகள் மனிதனுக்கு பெரும் தீங்கு விளைவிக்ககூடியது. சூழலை பெரிதும் பாதிப்படைய வைக்கின்றது. குறிப்பாக கழிவுநீர் ஓடும் வடிகால்களில் இவை தடைசெய்வதினால் வெள்ளம் ஏற்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

வவுனியாவில் பலவிதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டபோதிலும், சூழலை பேணும் விடயத்திலும் நாம் கவனம் எடுக்கவேண்டியவர்களாகவே உள்ளோம். இதற்கு மாணவர்கள் மத்தியில் நாம் சரியான பழக்கவழக்கங்களை ஏற்படுத்தவேண்டும். நாம் உபயோகிக்கும் பொருட்களை  சூழலுக்கு ஏற்றவகையில் மீள்சுழற்சிக்கு  பயன்படுத்தும் நடைமுறையை கொண்டுவரவேண்டும் எனவும் வவுனியா அரச அதிபர் குறிப்பிட்டார்.

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகளை சேகரித்து நகரசபை அதிகாரிகளிடம் கையளிக்கும் மாணவர்களுக்கு விசேட பரிசில் வழங்கும் திட்டம் பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் பி;ரதேச செயலாளர், நகரசபைத் தலைவர்,  பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .