Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள் நாளை மாலை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புனரமைக்கப்பட்ட பணிமனையும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
இதேவேளை நாளைக் காலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago