2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

தண்ணீர் பவுசருள் சிக்குண்டு இராணுவ கோப்ரல் மரணம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தண்ணீர் பவுசருக்குள் அகப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த  கோப்ரல் ஒருவர் மரணமாகியுள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டியில் இந்த சம்பவம் நேற்று திங்கள் மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் பி. சிவகுமார் மேற்கொண்டார்.

பவுசரிலிருந்து இறங்க முற்பட்டபோது கால் தவறி நிலத்தில் வீழ்ந்த வேளையில்  தலைக்கு மேலால் பவுசர் சில்லு ஏறி மண்டை உடைந்த நிலையிலேயே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.  சடலம் பிரேத பரிசோதனைக்கு வவுனியா அரசினர் பொதுவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .