Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இளைஞர் அணியின் தலைவராக ஆனந்தன் லோகேஸ்வரன், செயலாளர் தியாகராசா-கோபிநாத், பொருளாளர் ராமசாமி-ஜெயந்தன் ஆகியோரும் ஒன்பது பேரைக்கொண்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இளைஞர் சமுதாயத்தை நம்பியே எமது பழம்பெரும் கட்சி உள்ளது. அதனை வலுப்பெற செய்யவேண்டும் அரசியல் ஊடாக, ஜனநாயக ரீதியாக, அமைதி வழியில் நாம் எமது உரிமைகளை பெறமுயற்சிக்கின்றோம். அதற்கான இராஜதந்திர முறைகளையும் கையாண்டு வருகின்றோமென இந்த வைபவத்தில் உரையாற்றிய கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா எம்.பி. குறிப்பிட்டார்.
தமிழரசு கட்சியின் இளைஞர் அணி உருவாக்கப்படவேண்டுமென பலரிடமிருந்தும் கிடைத்த கோரிக்கைக்கு அமைய, அதனை மேற்கொண்டுள்ளோம்;. வரவேற்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் மகளிர் அணியும் தாபிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago