Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
பாதுகாப்பு படையினரின் உடையில் இரவில் வந்து யாராவது வீட்டு கதவை தட்டினால் திறக்கவேண்டாம் என வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
யன்னல் வழியாக அவர்களிடம் அடையாள அட்டையினை காண்பிக்குமாறு கேளுங்கள் அதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது அயலவர்களை கண்காணிக்குமாறு கூறிச் செல்லுங்கள்.
எந்த சந்தர்ப்பத்திலும் வீட்டுத்திறப்பை ஒளித்துவைத்துவிட்டு செல்லவேண்டும் உங்களோடு எடுத்து செல்லுங்கள்.
பெறுமதிவாய்ந்த நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வையுங்கள். வெளியே செல்லும்போது கவரிங் நகைகளை அணிந்து செல்லுங்கள்.
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் யாராவது நடமாடினால் அது தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவியுங்கள.
உங்களின் இளம் பிள்ளைகளை தனியாக வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள.; குழுவாக செல்லுமாறு ஆலோசனை தெரிவியுங்கள்.
பகலிலும். இரவிலும் வீட்டு கதவுகளை எந்த நேரத்திலும் மூடிவையுங்கள். குறிப்பாக இரவில் படுக்கைக்கு செல்ல முன் கதவுகள் யன்னல்கள் யாவும் நன்றாக மூடப்பட்டுள்ளதா என்பதினை அவதானியுங்கள்.
வீட்டுக்கு வெளியே இரவில் ஒரு மின்குமிழை எரியவிடுங்கள். உங்களுடைய பாதுகாப்பு நிமித்தம் குறித்த ஆலோசனைகளை பின்பற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுள்ளார்.
குற்றசெயல்களை கட்டுப்படுத்தி மக்களுக்கு சமாதானமான வாழ்வை ஏற்படுத்தவே பொலிஸாராகி நாம் கடுமையாக உழைக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9 hours ago
28 Oct 2025
tamilsalafi.edicypages.com Sunday, 19 December 2010 03:24 PM
எந்த சீருடை அணிந்தவர்களை நம்புவது என்றே தெரியவில்லை. உத்தியோகபூர்வ உத்தியோகத்தர்கள் கதவை தட்டி , கதவை திறக்க கொஞ்சம் தாமதித்தாலே ....???? பின்னர் எங்கே , அவர்களிடம் அடையாள அட்டை கேட்க, கதவை திறந்தாலே ...???
Reply : 0 0
xlntgson Sunday, 19 December 2010 09:11 PM
எங்கெல்லாம் இரகசிய கேமரா பொருத்தப்படவேண்டும் என்று பொலீசுக்கு தெரியாதா? கதவைத்தட்ட தட்ட வீட்டுக்குள்ளே இருப்பது எவ்வளவு கடினமானது என்று தெரியுமா? இதய நோயாளிகளுக்குத் தான் தெரியும்! உறுதியான இதயம் உள்ளவர்களுக்கும் இதய நோயை உண்டாக்கும். கொத்தல் ஹிம்புட்டு ஏற்றுமதி செய்து பெரும் பணம் தேடிய ஒரு சிங்களவர் ஆணைமடுவில் கேமராவை துண்டித்து பின் கொலை செய்யப்பட்டிருக்கிறாராம். அவரது வீட்டு கேட்டை எளிதில் யாருக்கும் திறக்க முடியாதாம். தானியங்கி வசதி கூட இருந்ததாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
28 Oct 2025