Super User / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
வன்னி மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட கலந்துரையாடலும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மீளாய்வும் இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.சிவசாமி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அபிவிருத்திக்கான நிதிகள் யாவும் மக்களுக்காகவே அரசினால் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்த பணம் மக்களுடைய பிரயோசனத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மகிந்த சிந்தனை வேலைத்திட்டமாகும்.
அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றது என அமைச்சர் றிசாட் பதியதீன் குறிப்பிட்டார்.
வவுனியாவிலும் மன்னாரிலும் அரச காணிகள் அத்துமீறி பிடிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு சில அதிகாரிகளும் துணை போகின்றார்கள.
திட்டமிட்டவகையில் காணி பங்கீடு செய்யப்படவேண்டும் வவுனியா நகரில் பல குளங்கள் குடியிருப்புக்களாக மாறியுள்ளது இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு வரஇடமுண்டு என்றார் றிசாட் பதியதீன்.
.jpg)
11 minute ago
52 minute ago
7 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
52 minute ago
7 hours ago
12 Dec 2025