2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் பிச்சைக்காரர்களால் தொல்லை

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் அரச பேருந்து நிலையத்தில் பிச்சைக்காரர்கள் அதிகமாக தங்கியுள்ளதால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமாக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிச்சைக்காரர்களில் சிலர் நாகரிகமற்ற முறையில் பொது இடங்களில் நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

10 ற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் பேருந்து தரிப்பிடத்தில் வசித்துவருகின்றனர். இவர்களில் சிலர் குடும்பங்களுடனும், சிறு பிள்ளைகளை வைத்தும் பிச்சையெடுக்கின்றனர்.

இந்  நிலையில் இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டைகளும் பிரச்சனைகளும் பொது இடங்களில் இடம்பெற்று வருவதோடு பணம் கேட்கும் பட்சத்தில் கொடுக்காவிட்டால் தகாத வார்த்தைகளினால் பேசுவதுடன் அநாகரிகமான முறையில் நடந்துக்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி. ஸ்ரான்லி டி மெல்லிடம்  கேட்டபோது, சிறு பிள்ளைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேற்படி பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--