Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 11 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் பிரதான பாலத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்துள்ளதோடு மேலுமொரு இளைஞர் பாடுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதபோதகரை பார்வையிட்டு திரும்பிய அப்போதகரின் மகனான சுரேஷ் (24) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரும் மற்றொரு இளைஞரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வரும்வழியில் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக கழுதை பாய்ந்ததினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் கடமையில் இருந்த இராணுவத்தினரும்,பொலிஸாரும் இணைந்து மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதித்தனர். எனினும் சுரேஸ் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
மற்றைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். விபத்து இடம்பெற்றமை தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago