2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் ஆசிரியரொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(விவேகராசா)

வவுனியா நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் நேற்று முன் புதன்கிழமை தினம் இனம்தெரியாதோரால் தாக்கப்பட்டதுடன் அவரது மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது என  பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை  இனந்தெரியாத நபர்கள் இவரை வழிமறித்து தாக்கியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--