2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு தமிழ் பிரிவு, வவுனியா வடக்கு (நெடுங்கேணி) மற்றும் வெங்கல செட்டிகுளம் ஆகிய  மூன்று பிரதேசசபைகளுக்கும்  இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான கருத்தரங்கொன்று நேற்று சனிக்கிழமை சூசைப்பிள்ளையார்குளம் நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் நடைபெற்றது.

தேர்தல் நடைமுறைகள், பிரசார உத்திகள், மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் யாழ.; மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் .அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வவுனியா நகரசபை எதிர்க்கட்சி தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட  முக்கியஸ்த்தர்கள் பலர் இந்த வைபவத்தில் கருத்துரைகளை  வழங்கினர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பல தமிழ்க்  கட்சிகளைக் கொண்ட வேட்பாளர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்கள் இன்னமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைளுக்கு வாக்களிக்கின்றனர் என்பதை  இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்ட வேண்டும். அதற்கேற்ற வகையில் மக்களை தயார்படுத்தும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக செயல்படவேண்டுமென கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--