Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா நகரசபைத் தலைவரை தெரிவுசெய்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியாவில் கூடவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியா நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரசபைத் தலைவராக கடந்த 15 மாதகாலமாக பதவி வகித்த எஸ்.என்.ஜி.நாதன் கடந்த 10ஆம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, வெற்றிடமாகவுள்ள பதவிக்கு கட்சியின் தீர்மானத்திற்கமையவே புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.
நகரசபைத் தேர்தலில் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரை தலைவராக நியமிக்க கட்சி தலைமைப்பீடம் முயற்சி எடுக்கவுள்ள அதேவேளை, எதிர்ப்புக்களும் ஏற்பட்டுள்ளன. வவுனியா நகரத்திற்கு முதன்மையானவர் நகரபிதா. இதற்கு தகுதி, ஆற்றல், ஆளுமை கொண்டவர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டுமென்பதே பலரும் விடுத்துள்ள கோரிக்கையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
58 minute ago
1 hours ago