2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலையிலிருந்து காணாமல்போன முதியவர் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காணாமல்போன முதியவர் ஒருவர் பேசாலை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 83) என்பவரே இவ்வாறு காணாமல்போனவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக மேற்படி முதியவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், முதியவரின்  உறவினர்கள் அவரை பார்க்க வந்தபோது அவர் வைத்தியசாலையில் இல்லாததைக் கண்டு குழப்பமடைந்தனர்.  முதியவரை தேடும் பணியில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள், மன்னார் பேசாலை கிராமத்தில் முதியவர் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் முதியவர்   வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .