2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் இலவச கண் மருத்துவ முகாம்

Super User   / 2011 ஜூன் 12 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பார்வை குறைபாடுடையோரின் (கண்பிறை நோயினால் பீடிக்கப்பட்டோரின்) குறைபாட்டை நீக்குவதற்கு எதிர்வரும் 14ஆம் 15ஆம் திகதிகளில் இலவச  கண் சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

விசேட கண் சத்திர சிகிச்சை மருத்துவர்கள் கொழும்பிலிருந்து இந்த மருத்துவ முகாமுக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கண் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டவர்கள் இந்த மருத்து முகாமில் சிகிச்சை பெறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவ முகாமுக்கு வெளியிடங்களான புநகரிஇ பளைஇ தருமபுரம்இ வட்டக்கச்சிஇ அக்கராயன்இ முழங்கால் போன்ற இடங்களிலிருந்து வருகை தரவுள்ள நோயாளிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் அலுவலம் ஏற்பாடு செய்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X