Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூன் 12 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
'வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது மீள்குடியேறி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது எமதும் அதிகாரிகளினதும் கடமையாகும். திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியும், நிதியும் எம்மால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளபோதும், அத்திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. அது ஏனென்று புரியவில்லை' என கைத்தொழில் வணிகத்துறை அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
மன்னார் முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கூறினர்.
இக்கூட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், மன்னார் அரசாங்க அதிபர் வேதநாயகம், பிரதேச செயலளார்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், மன்னார் முசலி பிரதேச அபிவிருத்தி குறித்து உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு அவைகள் நடை முறைப்படுத்தப்பட்டு தெரிவித்தார்.
'எம்மில் இனவாதம், மதவாதம், பிரதேசசாதம் ஏதுமில்லை. மனித நேயம்தான் உண்டு. அதனால் தான் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் சகல சமூகங்களுக்கான சகல உதவிகளையும் செய்துவருகின்றேன். சில அதிகாரிகள் அதனை புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர். இனியும் இவ்வாறு சிந்திக்காமல் அப்பாவி மக்களது தேவைகளை நிறைவு செய்து கொடுங்கள்.
யுத்தத்தால் அழிந்து போயுள்ள மண்ணை மீள கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளது. அதனை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும். இங்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உரிய முறையில் மக்கள் பணிக்கு செல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
முசலி பிரதேசத்திலுள்ள சுமார் 15 கிலோ மீற்றர் பாதைகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன. இதற்கொன 60.25 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முசலி பிரதேச வைத்தியசாலை செயற்பாடுகளுக்காக அம்பியுலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலைகள் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை போன்று இன்னும் எத்தனையோ வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவற்றுக்கெல்லாம் அதிகாரிகளினதும் பொது மக்களினதும் பங்களிப்பு இன்றியமையாதது' எனவும் அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago
57 minute ago
1 hours ago