2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வன்னியில் மீண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள்; பொதுமக்களின் சாட்சியங்களும் பதிவு

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி ஆணைக்குழு  எதிர்வரும் வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வெள்ளிக்கிழமை முல்லைத்தீவிலும், சனிக்கிழமை வவுனியாவிலும் தமது அமர்வுகளை நடத்தி பொது மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது என வவுனியா செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் ஒரு தடவை இந்த ஆணைக்குழு இங்கு கூடி மக்களின் சாட்சியங்களை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் மீண்டும் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X