2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் ஆட்டோ சாரதி வெட்டிக்கொலை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 23 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்று புதன்கிழமை இரவு  9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இராஜரட்ணம் விக்கிரம் (வயது 31) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியான கூமாங்குளம் அம்மன் கோவிலடியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .