2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வன்னியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2011 ஜூலை 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

வடக்கில்  கொக்காவில், வன்னிவிளாங்குளம், உடையார்கட்டுகுளம் பகுதிகளிலிருந்து பெருந்தொகையான ஆட்லறிகளையும் வெடிப்பொருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

120 மி.மி. மோட்டார் குண்டுகள் 1555,  12.7 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 27,000 தோட்டாக்கள், 7.52 மி.மீ துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 15,000 ஆகியனவும் இவற்றில் அடங்கும்.

நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின்போது, 81 மி.மீ ரக மோட்டார் குண்டுகள் 54, 86 பௌண்டர் குண்டுகள் 3000, 130 மி.மீ ஏவுகருவிகள்,  ஆகியன கைப்பற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல கூறினார்.

வெடிபொருட்கள் அற்ற 250 கிலோகிராம் விமான குண்டுகள் 4, 250, வெடிபொருட்களுடன்கூடிய 250 கிலோகிராம விமான குண்டுகள் 6, எம்.பி.எம்.ஜி துப்பாக்கிகளுக்கான 2000 சுற்று தோட்டாக்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 


  Comments - 0

 • nakkiran Saturday, 16 July 2011 01:45 AM

  கண்ணிவெடி தேடுதல் முடிவடைந்து, அகற்றுதல் முடிவடைந்து, மக்கள் மீள் குடி அமர்ந்த நிலையில் பாரிய குண்டுகள் இருப்பது ஆச்சரியம், அபாயமும். பத்திரிகைகள் உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

  Reply : 0       0

  ICC Saturday, 16 July 2011 09:33 AM

  அது எப்படி கண்ணிவெடி தேடிய போது இக்குண்டுகள் இருப்பது தெரியாமல் போனது . இப்பொழுது ஆங்காங்கே குண்டுகள் இருக்கிறது ஒன்னுமே புரியல்லே என்னெனவோ
  நடக்கிறது .

  Reply : 0       0

  musari Sunday, 17 July 2011 01:34 AM

  இப்பொழுதுதான் தெரிகிறது கண்ணிவெடி (லாண்ட்மைன்) எப்படி தேடி
  கண்டுபிடித்திருப்பார்கள் ?. வன்னியில் நடமாடுவது சொர்க்கத்துக்கு போவதுபோல.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .