Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 15 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கம்பராமாணத்தில் கைகேயி சூழ்வினைப்படலம் தொடர்பான 'சுழலும் சொல்லாடு களம்' என்ற இலக்கிய நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வவுனியா நகரசபை புதிய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா கலந்கொள்ளவுள்ளார். தொடக்கவுரையை வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தக் கல்லூரி ஆசிரியர் எஸ்.கருணாகரனும், கைகேயி சூழ்வினைப் படலம் தொடர்பான அறிமுகவுரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாசும் ஆற்றவுள்ளனர்.
மந்திரையின் சூழ்ச்சியால் பெரிதும் துன்பத்திற்குள்ளான பாத்திரம் எது? என்பது தொடர்பில் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் சொல்லாடுகளம் இடம்பெறும். கைகேயி அல்ல தசரதனே! எனச் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேலும் தசரதன் அல்ல இராமனே! என யாழ். பல்ககைலக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பியும் இராமன் அல்ல பரதனே! என தமிழ் முதுதத்துவமாணி ஆய்வு மாணவன் த.அஜந்தகுமாரும் பரதன் அல்ல இலக்குவனே! என கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசனும் இலக்குவன் அல்ல கைகேயியே! என யாழ். சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் கு.பாலசண்முகனும் வாதங்களை முன்வைக்கவுள்ளனர். நிகழ்வில் நோக்குநராக யாழ். புதிய உயர் கல்லூரி விரிவுரையாளர் நா.குழந்தை செயற்படவுள்ளார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago