Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளமையால் வவுனியா மாவட்டத்திற்கும் டெங்கு பரவக்கூடிய சாத்தியக்கூறு காணப்படும் நிலையில் அங்கு டெங்கொழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட டெங்கொழிப்பு வாரத்தையிட்டு வீட்டு உரிமையாளர்களும் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களும் துப்பரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம சேவகரை தலைமையாக கொண்ட டெங்கொழிப்பு குழுக்கள் துப்பரவு செய்யவேண்டுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களுக்கு டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காணக்கூடியவாறு பயிற்சிகளை வழங்கி அவர்களை ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுப்பி பரிசோதிக்கவுள்ளோம். டெங்கு நுளம்பு பரவும் இடங்களை வைத்துள்ளோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .