2021 மே 18, செவ்வாய்க்கிழமை

துனுக்காய் கிராம சேவையாளர் பிரிவுகளை குறைக்க நடவடிக்கை

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

முல்லைத்தீவு மாவட்டம் துனுக்காய் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை காலை துனுக்காய் உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில், துனுக்காய் உதவி அரசாங்க அதிபர் எஸ்.குனபாலன் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வவுனியா நகரசபை உப தலைவர் எம்.எம்.ரதன் மற்றும் கிராம சேவையாளர்கள் மற்றும் துனுக்காய் உதவி அரசாங்க அதிபர் எஸ்.குனபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .