2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மன்னார் வீதி விபத்தில் வயோதிபர் பலி

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் - தலைமன்னார் வீதியில் கீலியன் குடியிருப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில்- கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாவுலு சந்தியாப்பு (வயது-65) எனும் வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பேசாலை- தலைமன்னார் வீதியில் உள்ள கீலியன் குடியிருப்பு கிராமத்தில் தனது வேலையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டி மூலம் தனது வீடு அமைந்துள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது அவரின் பின்னால் வேகமாக வந்த தனியார் பேரூந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதனால் குறித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த பஸ் சாரதியை கைது செய்தனர். குறித்த பேரூந்தில் வந்தவர்கள் அனைவரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மடு தேவாலயத்திற்கு சென்று விட்டு தலைமன்னார் பகுதிக்கு சென்றபோதே மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--