Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்றையதினம் நடைபெறவுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்எல்லை வரையறைக் கூட்டத்தை உடன் கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதிக்கு அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சிசபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாமல் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை மீள்வரையறை செய்வதற்கான ஏற்பாடுகளை அவசர அவசரமாக முன்னெடுத்துள்ளது.
ஏராளமான மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதுள்ளதுடன், பெருமளவிலான நிலப்பரப்புக்களின் கண்ணிவெடிககள் இன்னமும் அகற்றப்படாமலுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் எப்போது தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியுமென எம்மிடம் கேட்டவண்ணமுள்ளனர்.
எனவே, மேற்படி விடயங்கள் மிக அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியுள்ளதாலும் அவைகளின் மீது உடனடிக் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாலும் இத்தகைய விடயங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து விட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைகளை மீள்வரையறை செய்யும் பணியை முன்னெடுக்கலாம். அதுவரை இத்திட்டத்தைக் கைவிடுமாறும் இன்றையதினம் நடைபெறவுள்ள கூட்டத்தை உடன் கைவிடுமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago