Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வவுனியா நகரசபை உறுப்பினர் செ.சுரேந்திரன் உறுப்புரிமையினை இழக்கவில்லை. அது தொடர்பில் உதவித் தேர்தல் ஆணையாளரினால் எனக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படவுமில்லை என வவுனியா நகரசபையின் தலைவர் ஐ.கனகையா தெரிவித்துள்ளார்.
நகரசபை உறுப்புரிமையினை செ.சுரேந்திரன் இழந்துள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் இலங்கை தழிழரசுக்கட்சியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டும் வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திற்கு செ.சுரேந்திரனை அனுமதித்தமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையின் உறுப்பினரான செ.சுரேந்திரன் 23.3.11ஆம்; திகதியில் இருந்து 29.6.11ஆம் திகதி வரை இடம்பெற்ற 4 கூட்டங்களுக்கு பங்கேற்காமையினால் உறுப்புரிமையை இழந்துள்ளதாகவும் எனவே அவரது இடத்திற்கு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் ஒருவரை 30 நாட்களுக்குள் நியமிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரான மாவை சேனாதிராஜாவுக்கு 1.9.2011ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளரினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் செ.சுரேந்திரன் 20.10.2011ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திற்கு சமூகம் கொடுத்ததுடன் அவரை கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு நகரசபை தலைவரினால் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நகரசபைத் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
செ. சுரேந்திரனை உறுப்புரிமையில் இருந்து வெளியேறச்சொல்வது சதி நடவடிக்கை. உதவி தேர்தல் ஆணையாளர் மாவை சேனாதிராஜாவுக்கே கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார். எனக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கைவில்லை. செயலாளருக்கும் கடிதம் கிடைக்கவில்லை எனவும் கூறினார். ஆனால் செயலாளர் உதவி தோர்தல் ஆணையாளரிடம் சென்றே கடிதத்தை பெற்று கடிதம் தந்ததாக கூறுகின்றார். இதே செயலாளர் உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு சமூகம் கொடுக்காத தகவல்களையும் 19.7.2011 இல் கடிதமாக அனுப்பியிருக்கிறார். எனவே செ. சுரேந்திரன் உறுப்புரிமையை இழக்கவில்லை என்பதே எனது கருத்து என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago