2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நீரிழிவுதினத்தையொட்டி வவுனியாவில் ஊர்வலம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 14 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

உலக நீரிழிவு தினம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதையொட்டி, வவுனியாவில் இன்று திங்கட்கிழமை விழிப்புணர்வூட்டும் ஊர்வலம் நடைபெற்றது.  வவுனியா பொதுவைத்தியசாலையின் நீரிழிவு மையம் இந்த விழிப்புணர்வூட்டும் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது.

நீரிழிவு நோயால் உலகளாவிய ரீதியில் 180 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதம் தொடக்கம் 12 வீதம் வரையான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொதுவைத்தியசாலையின் வைத்திய அத்;தியட்சகரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர் இந்நோயின் விளிம்பிலுள்ளனர்.  நீரிழிவு நோய் கட்டுப்படுத்தக்கூடியது. நீரிழிவு நோயால்  பாதிப்புக்குள்ளானோர் வைத்தியரின் அறிவுரைக்கமைய உரியை சிகிச்சையை பெறுவதன் மூலம் சுகதேகியாக வாழ முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவின் பிரதான வீதிகளின் ஊடாக சென்ற இந்த ஊர்வலத்தில் வவுனியா பொதுவைத்தியசாலையின் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .