Menaka Mookandi / 2011 நவம்பர் 18 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வவுனியா, கல்மடு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் புதைத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் கிளைமோர் குண்டுகள் - 18, செல்மோட்டார் - 1, டெட்டனேற்றர்கள் - 5, வயரிங் டியூப்கள் - 4, மிதிவெடிகள் - 3, பீஜிங் குண்டுகள் - 17, வயர் 2 என்பன உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதமும் கல்மடு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago