2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கட்டாக்காலி கழுதைகளிடமிருந்து பயன்பெற ஆலோசனை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னாரில் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்ற சுமார் 500 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி கழுதைகளிடமிருந்து  உச்சப்பயனை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை நடத்தப்படுகிறது.

இது தொடர்பில் மன்னார் நகரசபை கடந்த 5 மாதங்களாக ஆலோசனை செய்து வருகின்றது.

இதற்காக 'அவுஸ்திரேலியா டயஸ்போரா லங்கா' அமைப்பின் உதவி கோரப்பட்டது. இது தொடர்பில் பல வெளிநாட்டு மிருகவளர்ப்பு சங்கங்களுடனும் கால்நடை பாதுகாப்பு வைத்தியர்களுடனும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் மன்னாரில் சுற்றித்திரியும் கட்டாக்காலி கழுதைகளுக்கு விடிவுகாலம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் டயஸ்போரா லங்கா அமைப்பின் பிரதிநிதி  சின்கிலேயர் பீற்றர் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மன்னாரில் சுற்றிதிரியும் கட்டாக்காலி கழுதைகளிடமிருந்து  பயன் பெறுவது தொடர்பில்; இந்தியாவிலிருந்து 3 ஆலோசகர்கள் மன்னாருக்கு வருகைதந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களிடம் கேள்விக்கொத்து மூலமாக கழுதைகளின் பிரயோசனங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ் ஆய்வின் மூலம் மன்னார் மக்களில் ஒரு சிலர் கழுதைகளின் பிரயோசனத்தை அறிந்துகொண்டதுடன், கழுதைகளை பராமரிப்பதன் மூலம் கழுதைகளின் உச்சப்பயனை பெறமுடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கட்டாக்காலி கழுதைகளின் வாய்க்கு கடிவாளம் இட்டு ஆடு, மாடு, குதிரைகள் போன்று பல வேலைகளுக்கு அதனை பயன்படுத்த முடியும்.

இதேவேளை கழுதையின் சாணம் நுளம்பு, கொசுக்கள், ஈக்கள் போன்றவற்றிற்கு எதிர்ப்பு சக்தியாக உள்ளது. இவற்றை புகைமூட்டுவதன் மூலம் பாதுகாப்பளிக்க முடியும்.

இதனால் வேண்டப்படாத மிருகமாக ஒதுக்கி விடப்பட்ட மன்னார் கட்டாக்காலி கழுதைகளுக்கு  ஓர் விடிவு காலம் பிறக்குமென  அவர் மேலும் தெரிவித்தார்.

உலகில் கழுதைகளுக்கான பராமரிப்பு இல்லங்கள் 1973ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.  இதன் மூலம் 12,000 இற்கும் மேற்பட்ட கழுதைள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஜக்கிய இராட்சியம் உலகின் 8ஆவது கழுதை பராமரிப்பு நாடாக திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .