2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இந்திய வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் முறைக்கேடு: செல்வம் எம்.பி

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                   (எஸ்.ஜெனி)
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் பயணாளிகள் தெரிவின் போது பாரிய முறைக்கேடு இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இந்திய வீட்டுத்திட்டமானது இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய, பின்தங்கிய மக்களுக்காக வழங்கப்பட்டதாகும். ஆனால் மன்னார் மாவட்டத்தில் இந்த தெரிவில் பாரீய முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதை  நாங்கள் அறிகின்றோம்.

தற்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டத்திற்கான பயணாளிகள் தெரிவு என கூறி பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் யுத்தத்தினால் பாதிக்கப்படாத, பணவந்தர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்களின் தெரிவிற்கு அதிகாரிகள் சிலர் காரணமாக உள்ளனர்.

எனவே இந்த தெரிவின் போது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்'  என பாதிக்கப்பட்ட மக்கள் தம்மிடம் முறையிட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தான் உடனடியாக இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .