2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

கொலை தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம்: பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் உப்புக்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நில அளவை பணியாளர்  கொலை தொடர்பான சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும.; என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மன்னார் நகரம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அந்த சுவரொட்டிகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 07-12-2012 அன்று மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள நில அளவை அலுவலகத்தைச் சேர்ந்த துனை நில அளவை அலுவலகரான நாமல் அஜந்த குமார சேமரத்தின என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்படும். என குறித்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .