2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பாதிப்புக்குள்ளான மக்களின் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)
சீரற்ற கால நிலைக் காரணமாக வன்னி மாவட்ட மக்களுக்கான நிவாரண வசதிகளுக்கு தேவையான நிதியினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஒதுக்கீடு செய்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார்.

இது தொடாபில் அவரது மேலும் தெரிவித்ததாவது,

சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல குளங்கள் பெருக்கெடுத்துள்ளன. மல்வத்துஓயாவின் நீர் மன்னார் மாவட்டத்தினை நோக்கி வந்தமையினால்; மடு, முசலி, நானாட்டான், மன்னார் நகர, பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளுக்கு போதுமான நிதிகளை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறு தாம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கேட்டுக் கொண்டதற்கமைவாக போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

வெள்ளத்தால் மடு, சிலாவத்துறை பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை அக்கிரமங்களுக்கு எடுத்து செல்ல முடியாதுள்ள நிலையில் ,கடற்படையின் உதவியுடன் படகு மூலம் அதனை விநியோகிக்க போதுமான நடவடிக்கையெடுக்குமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கடற்படை பொறுப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளேன்.

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க தேவையான உதவிகளை நல்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த யாபா அபயவர்தனவிடம்; வேண்டுகோள் விடுத்துள்ளளேன். 

இதேவேளை வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் விபரங்களை சேகரிக்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஹால்தீன் மற்றும் பிராந்திய விவசாய பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .