2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வவுனியா விபத்தில் முதியவர் காயம்

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா கொவில்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்  முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்த பின் கைதிகளை ஏற்றிக்கொண்டு கெப்பட்டிகொலாவ நோக்கி சென்ற வவுனியா சிறைச்சாலை பஸ்ஸும்  மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள உமாமகேஸ்வரன் சந்தியில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் குறித்த பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் காயமடைந்தார்.

பொன்னையா சுப்பிரமணியம் (வயது 68) என்பவர் இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
        
இவ் விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .