2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா கடத்திய இராணுவ வீரர் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

ஒருகிலோ இரண்டு கிராம் கஞ்சா கடத்திய இராணுவ வீரர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். வவுனியா வீதிச்சோதனை சாவடி நிலையத்தில் வைத்தே குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலையிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் பயிற்சியை முடித்துக்கொண்டு  வவுனியா முகாமிற்கு மீண்டும் திரும்வந்த போதே குறித்த இராணுவ வீரரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் கஞ்சா விநியோகப்பவர்களுக்கு வழங்குவதற்காகவே இராணுவ வீரர் கஞ்சாவை கடத்தி வந்திருப்பதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--