2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

முழங்காவில் பிரதேச வைத்தியசாலை திறந்து வைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்

கிளிநொச்சி முழங்காவில் பிரதேச மருத்துவமனை இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபகஷ, ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் வில்லியம் வொயின்ஸ் ரெயின் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனை அமெரிக்க ஆசிய பசுபிக் கட்டளைப் பீடத்தினால் வழங்கப்பட்ட நிதிக்கொடையின் மூலம் நிர்மாணிக்கப்பட்டது.

பளை, தருமபுரம் ஆகிய இடங்களிலும் மேலும் இரண்டு மருத்துவமனைகள் இவ்வாறு அமெரிக்க ஆசிய பசுபிக் கட்டளைப் பீடத்தினால் வழங்கப்பட்ட நிதிக்கொடையின் முலகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய திறப்பு விழா நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஜி.மஹிபால, வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், கிளிநொச்சி பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ப.கார்த்திகேயன், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணரட்ணம் கோபிநாத், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--