2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

இருளற்ற இலங்கையே எமது இலக்கு: நாமல்

Super User   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


இருளில்லாத இலங்கையை உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அரசாங்கத்தின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிளிநொச்சி, புநகரி பிரதேசத்திலுள்ள முழங்காவில் பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதற் தடவையாக மின் விநியோகம் வழங்கப்பட்டது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

:நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் ஏற்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த மின் விநியோகத்திட்டம் இன்று மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இது இந்த அரசாங்கத்தின் பாரபட்சமற்ற முறையில் எல்லா இடத்துக்கும் விரைவான அபிவிருத்தியும் முன்னேற்றமும் ஏற்படுத்தும் திட்டத்தின் நடவடிக்கைக்கு சான்றாகும்.

மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் கேந்திர முக்கியத்துவம் மிக்க விவசாய பிரதேசமான முழங்காவில் பிரதேசத்துக்கு இந்த மின்சார விநியோகம் பல  நன்மைகளை தரவுள்ளது. பின்தங்கிய பிரததேசமாக கணிப்பிடப்பட்ட முழங்காவில் தற்போது பிரதான வீதியினாலும் மின்னிணைப்பின் மூலமும் விரைவான அபிவிருத்தியில் இணைக்கப்பட்டு அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாறியுள்ளது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--