2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் இளம் யுவதியைக் காணவில்லை

Kanagaraj   / 2014 மார்ச் 23 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சாந்திபுரத்தை சேர்ந்த அஜித் லக்சிகா (வயது-16) என்பவர் கடந்த 14-02-2014 தொடக்கம் காணாமல் போயுள்ளதாக அவருடைய தாய் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த யுவதி தையல் வகுப்பிற்கு சென்றதாக தாய் தெரிவித்தார். குறித்த யுவதி வீடு திரும்பாத நிலையில் தாம் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இதுவரை பொலிஸார் சரியான பதில் அளிக்கவில்லை எனவும் குறித்த யுவதியின் தாய் தெரிவித்தார்.

ஆனால் சம்பவ தினத்திற்கு மறு நாள் காலையும் மாலையும் (15-02-2014) குறித்த யுவதி தொலையேசியூடாக தாயுடனும் நண்பர்களுடனும் கதைத்துள்ளார்.தான் வவுனியாவில் தன்னுடைய உறவினர் ஒருவர் கொண்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அதற்குப் பின்னர் இதுவரை எந்த வித தொடர்பும் கிடைக்கவில்லை.ஆனால் வவுனியாவில் இருந்து கதைப்பதாக கூறியது பொய் என தற்போது தெரியவந்துள்ளது.

இவருடைய தந்தையார் கடந்த ஆறு வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு தற்போது புனர்வாழ்வில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அஜித் லக்சிகா தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் இல:-180/2 சாந்திபுரம் மன்னார் என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளும்படி  பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய மகளிற்கு என்ன நடந்தது என்பதை இதுவரை அறியாததால் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக தெரிவித்தார். தமது மகள்   காணாமல் போயுள்ளாரா ? அல்லது கடத்தப்பட்டுள்ளாரா? என்பது இது வரை தெரிய வில்லை. எனத் தாய் தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .