2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வைத்தியசாலைக்கு இதய சிகிச்சை நிபுணர் நியமனம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பொது வைத்தியசாலைக்கு இதய சிகிச்சை நிபுணர் கலாநிதி சமிந்த குலரட்ண  என்பவர் நிரந்தரமாக 25ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.

இதுவரை காலமும் வவுனியா பொது வைத்தியசாலையில் இதய சிகிச்சை நிபுணர்கள் நிரந்தரமாக இல்லாத நிலையில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து 02 வைத்தியர்கள் இவ்வைத்தியசாலைக்கு வந்து நோயாளிகளுக்கான  சேவையை வழங்கியிருந்தனர்.

தற்போது இவ்வைத்தியசாலைக்கு நிரந்தரமாக இதய சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதால்,  இனிவரும் காலங்களில் சீராக இதய சிகிச்சையை  வழங்க முடியும்.

மேலும், கதிரியக்க பரிசோதனை (ஸ்கான்) செய்வதற்காக  திகதிகள் வழங்கப்பட்ட நோயாளிகள்  வழங்கப்பட்ட திகதிகளிலின்றி விரைவாக பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே வழங்கப்பட்ட திகதிவரை நோயாளிகள் காத்திராமல்,  வைத்தியசாலைக்கு வருகை தந்து பரிசோதனைக்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .