2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

முல்லை. வலயக் கல்வி அலுவலகத்தை இடமாற்ற வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகக் கட்டிடத்தில்  வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த அலுவலகத்தை வேறிடத்திற்கு மாற்றுமாறு வடமாகாண கல்வித் திணைக்களத்திடம் மேற்படி அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. இந்த அலுவலகம் குறைந்த மூலதனங்களைக் கொண்டு கடற்கரைக்குச் செங்குத்தாகக் கட்டப்பட்டதால், அலுவலகக் கட்டிடத்தில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அலுவலகம் பொருத்தமானபடி  நிர்மாணிக்கப்படாமையால்;, ஒவ்வொரு நாளும் முற்பகல்  11 மணியிலிருந்து அலுவலகத்திற்குள் உஷ்ணம் ஏற்படுகிறது. இவ்வாறு உஷ்ணம் காணப்படும் வேளையில்   அலுவலகத்தினுள் இருக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில்  உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .