2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அவுஸ்திரேலியா தூதரக செயலாளர் எஸ்.ஸ்ரிபன் மன்னார் விஜயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உலக வங்கியின் நிதி உதவியுடன் 'நெல்சிப்' திட்டத்தின் கீழ் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக விசேட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை(8) மன்னார் நகர சபைக்கு விஜயம் செய்திருந்தனர்.

குறித்த குழுவினருடன், அவுஸ்திரேலியா தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் எஸ்.ஸ்ரிபன், அவரது உதவியாளர் திருமதி எஸ்.டில்காரா, உலக வங்கியின் திட்ட ஆலோசகர் எஸ்.மனோகரன்,   ஆகியோரே வருகை தந்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது.

இதன் போது உலக வங்கியின் நிதி உதவியுடன் 'நெல்சிப்' திட்டத்தினூடாக மன்னார் நகர சபைக்கு வழங்கப்பட்ட 96 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினூடாக மன்னார் நகர சபை முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டோ லெம்பேட், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர்கள் உட்பட மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.துரம் மற்றும் மன்னார் நகர சபையின் அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .