2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பாரவூர்தி குடைசாய்ந்தது; ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக பாரவூர்தியொன்று  திங்கட்கிழமை (21) காலை குடைசாய்ந்ததால் கொழும்பு, ஜா-எல பகுதியைச் சேர்ந்த சபஸ்ரியான் ஜோசப்றெக்ஸ் (வயது 40) என்பவர் மரணமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்மன் மகேந்திரா தெரிவித்தார்.

இதன்போது, படுகாயமடைந்த மூவர் கிளிநொச்சி மாவட்;ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விறகுகள் மற்றும் குடிநீர் போத்தல்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த இப்பாரவூர்தி மின்கம்பமொன்றுடன் மோதி குடைசாய்ந்ததாகவும் அவர் கூறினார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .