Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
எமது மக்களின் தலைவிதி பற்றி ஒரு சிலர் மட்டுமே தீர்மானிக்கும் பரிதாப நிலையை இனியும் நாம் அனுமதிக்க முடியாது என்று தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சி.க. சிற்றம்பலம் புதன்கிழமை (04) தெரிவித்தார்.
சுதந்திரதின நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1948இல் இலங்கை சுதந்திரமடைந்த போது உருவாகிய ஒற்றையாட்சி அமைப்பும் அதன் பின்பு அழுலுக்கு வந்த அரசியல் அமைப்புக்களும் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை ஏற்காது பௌத்த, சிங்கள மேலாதிக்கத்துக்கே வழிவகுத்திருந்தது.
இதனால், சுதந்திரமென்பது பெரும்பான்மை மக்களாகிய பௌத்த சிங்கள மக்களே என்ற கோட்பாட்டின் அடிப்டையானது, தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட இன்றைய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகியன மாறி மாறி வந்த சுதந்திரதின வைபவங்களில் கலந்துகொள்ளாது அவற்றை பகிஷ்கரித்தது மட்டுமன்றி கறுப்புக்கொடி போராட்டங்களும் நடத்தியதும் வரலாறாகும்.
எமக்கான நியாயமான அரசியல் தீர்வு இன்று வரை கிடைக்காத நிலையில், இத்தீர்வை நோக்கித் தம்மையே அழித்த நமது தலைவர்கள், மக்கள், போராளிகள் ஆகியோரது அளப்பரிய தியாகமே, இன்று தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்கும் கடப்பாடும் தார்மீக பொறுப்பும் சர்வதேசத்துக்கே உண்டு என்று சர்வதேசத்தின் மனச்சாட்சியை எழுப்புகின்றது.
ஆதலால், கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அவர்களின் வழி நடத்தலில் செயற்படாது இவ்விழாவில் கலந்து கொண்டோர் மீது எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் மத்திய செயற்குழுவுக்கே உரியதால், இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago