Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்,ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 220 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவால் செவ்வாய்க்கிழமை(10) திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டடப் பணிகள் கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவடைந்தன.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோநேதராகலிங்கம், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரத்தில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக முல்லைத்தீவு நகரின் சகல கட்டுமானங்களும் அழிவடைந்தன.
இதனால் நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். 1996ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்த மக்கள், 2004ஆம் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பாதிப்புக்குள்ளாகினார். இதன்போது 3000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
2008ஆம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்றபோதும் முல்லைத்தீவு நகரம் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.
2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர், முல்லைத்தீவு நகரை அபிவிருத்தி செய்யும் வகையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடப் பணிகள் 220 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 250 மில்லியன் ரூபாய் செலவில் மாவட்ட செயலக மிகுதி வேலைகள் இடம்பெறவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
43 minute ago
47 minute ago
2 hours ago