2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ரிஷாட் பதியுதீன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், உப்புக்குளம் மீனவர்களின் இறங்துறை தொடர்பில் அமைச்சர் ரிஷாட்; பதியுதீனுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மீதான வழக்கு, இன்று வியாழக்கிழமை (6) மன்னார் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, மன்றில் ஆஜராகியிருந்த இரகசிய பொலிஸ் அதிகாரி, சட்டமா அதிபரின் அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் ஒத்திவைத்தார். 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் வழிகாட்டலில், சட்டத்தரணிகளான ருஸ்தி ஹபீப், ரமீஸ் பஷீர் மற்றும் சப்ராஸ் ஹம்ஸா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .