2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வவுனியாவில் 50,000 மரக்கன்றுகள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது முறை பதவியேற்பு மற்றும் பிரந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று காலை நாட்டப்பட்டன.

மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தலைமையிலான பிரதான நிகழ்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை, சகல அரசாங்க அலுவலகங்கள், பொது இடங்கள் மத தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பாதுகாப்பு படையினரின் முகாம்கள். உள்ளிட்ட பல இடங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

அத்துடன், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலும் மரக்கன்றுகள் நாட்டும் வைபவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--